ஹரியானாவில் வசிக்கும் ரோஹின்ய அகதிகளை JAQH மாநில நிர்வாகிகள் சந்திப்பு

இன்று 28-09-2017 வியாழக்கிழமை காலை 6 மணிக்கு ஹரியானாவில் வசிக்கும் ரோஹின்ய அகதிகளின் நிலையை நேரடியாக அறிய பயணமானோம்.
ஹரியானாவின் முஸ்லிம் பெரும்பான்மை மாவட்டமான நூஹ் மாவட்டத்தில் சந்தேனி என்ற பகுதியில் அமைந்திருக்கும் இரு அகதிகள் முகாம்களை பார்வையிட்டோம்.
முதல் முகாமில் 61 குடும்பத்தைச் சார்ந்த 170 நபர்களும் இரண்டாவது முகாமில் 62 குடும்பத்தைச் சார்ந்த 232 நபர்களும் வசித்து வருகின்றனர்.
இவர்களுடைய முகாம் நல்ல முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
தேவையான ஏற்பாடுகள், மதரஸா, பள்ளிவாசல், மற்றும் பள்ளிக்கூட வசதியுடன் அடிப்படை சுகாதார ஏற்பாடுடன் இவர்களின் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
ஒரு முகாமில் குடி நீருக்கான ஏற்பாடுகள் இல்லை என்று கூறியதோடு உணவு இல்லாமல் வாடுவதையும் நம்மிடம் பகிர்ந்தனர். அரசு இவர்களை வெளியேற்றுவோம் கூறிய பின்னர் காவல்துறையினர் இவர்களை வெளியே சென்று வேலை செய்ய அனுமதிக்கவில்லை.
மார்க்கத்திற்காக ஹிஜ்ரத் செய்த மக்கள் உணவுக்காக வாடுவதைப் பார்த்து மிகவும் வருத்தமாக இருந்தது.
இந்த முகாம்களில் முஹம்மது அலி ஷான் மற்றும் முஹம்மது அலி ஜவுஹர் ஆகிய இரு சகோதரர்களை சந்தித்தோம். இவர்களும் அகதிகளை வெளியேற்றக்கூடாது என்ற வழக்கை உச்ச நீதிமன்றத்தில் பதிவு செய்து நடத்தி வருபவர்கள்.
ஏற்கனவே முஹம்மது சலிமுல்லாஹ் என்ற சகோதரரை நேற்று சந்தித்தோம். வழக்கின் நிலையை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர்.
தொடர்ந்து தில்லிக்கு சென்று அங்கு மீண்டும் ஒரு முகாமை பார்வையிட்டோம். ஸ்ரம்பிஹார் என்ற பகுதியில் அமைந்திருக்கும் முகாமில் 71 குடும்பத்தைச் சார்ந்த 367 நபர்கள் இங்கு வசிக்கின்றனர்.
இந்த முகாமில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை.
இவர்களுடைய தேவைகள் தற்போது உணவும், வேலை வாய்ப்புமாக இருக்கிறது.
இவர்களை சந்தித்ததில் கிடைத்த நல்ல அனுபவம்..
வசதியில்லாத நிலையிலும் மதரஸாக்களையும் மஸ்ஜிது களையும் உருவாக்கி தாமும் தமது இளைய சமூகமும் இஸ்லாமிய அடிப்படையில் வாழ வேண்டுமென்ற ஆர்வம்..
அது நம்மில் எத்தனை பேருக்கு இருக்கின்றது.
#jaqh #jaqh_news #jaqh_media
#Rohingya_Update_JAQH_NEWS

Leave a Comment