3 அனாதை இல்லங்கள்

3 அனாதை இல்லங்கள்orphanage

ஆர்ஃபனேஜ்

அல்லாஹ்வின் மாபெரும் அருளால் தமிழகத்தில் திருச்சி ஸலபிநகரிலும்,மணப்பாறையிலும்,குமரிமாவட்டம் இனையத்திலும் மூன்று அனாதைஇல்லங்களை நிறுவி 800க்கும் அதிகமான அனாதைகளை பராமரிக்கும் பொறுப்பை ஜம்யிய்யத்துஅஹ்லில்குர்ஆன்வல் ஹதீஸ் அமைப்பு சீரும் சிறப்புடனும் நடத்திவருகிறது.

 

ஆண் பெண் இருபாலாருக்கும் தனித்தனியாக பாதுகாப்பான காற்றோட்டமான படுக்கை வசதிகள் கொண்ட தங்கும் விடுதிகள்,தரமான சைவ அசைவ உணவுகள்,தரமான சீருடைகள் மற்றும் வண்ண ஆடைகள்,சிறந்த மருத்துவப்பராமரிப்பு,அன்பான அரவணைப்புடன் மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இங்கு அரவணைக்கப்படும் அனாதைகளுக்கு தமிழ்வழிக் கல்வி,ஆங்கில வழிக்கல்வி,கம்யூட்டர்கல்வி இவற்றுடன் மார்க்ககல்வியும் புகட்டப்படுகிறது.

அன்புள்ளம் கொண்ட சகோதர சகோதரிகளே! அல்லாஹ்வின் மிகப்பெரும் கிருபையாலும் தாங்களைப்போன்றவர்களின் பேராதவராலும் இந்நிறுவனங்கள் சிறப்பாக இயங்கிவருகிறது.அல்ஹம்துலில்லாஹ்.

தர்ம சிந்தனை உள்ள தங்களைப்போன்றவர்களின் உதவிகளைத் தவிர இல்லத்திற்கு நிரந்தர வருமானம் எதுவுமில்லை. ஆகையால் இந்நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட தாங்களும் தங்கள் உறவினர்கள் மற்றும் நண்பர்களும் தாராளமாக தங்களது ஸக்காத்,ஸதகா,சந்தா ஆகிய தான தர்மங்களை பணமாகவோ,பொருளாகவோ தந்து உதவவும். அத்துடன் தாங்கள் முடிந்தால் ஒரு மாணவருக்கோ அல்லது அதற்கு மேற்பட்டட மாணவர்களுக்கோ பொறுப்பேற்று கொணடு அதற்குரிய செலவையும் அனுப்பி தந்து உதவுங்கள்.

அலலாஹ்வின் விருப்பததிற்கேற்ப இப்பணியில் தாங்களும் பங்கெடுத்துக்கொண்டு ஈருலக வெற்றி பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Leave a Comment